
முத்துப்பேட்டை அடுத்த பாண்டி சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி செட்டியர் மகன் தண்டாயுதபாணி(45). இவர் நேற்று முன்தினம்; இரவு தனது பைக்கிள் வீட்டிலிருந்து புறப்பட்டு முத்துப்பேட்டைக்கு சென்றார். ஆலங்காடு படித்துரை அருகில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு முன்னால் சரக்கு ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது தண்டாயுதபாண்டி சென்ற பைக் எதிர்பாராவிதமாக லாரி பின்பக்கம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தண்டாயுதபாணிக்கு பலத்த காயம் ஏற்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து லாரியை கைபற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
செய்திகள் படங்கள்
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை