கடலோர காவல் படையின் விழிப்புணர்வு பைக் பேரணி
Posted February 06, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
தமிழ்நாடு கடலோர காவல் படை சார்பில் கடல் மீனவர்களுக்காக ஆபத்தான நேரங்களில் கடைபிடிக்க வேண்டிய விசயங்கள் குறித்து விழிப்புணர்வு பைக் பேரணி சென்னையிலிருந்து துவங்கி கடலோர மாவட்டங்கள் வழியாக கன்னியாகுமரி சென்று அடைகிறது. அதற்க்காக கடந்த 1-ந்தேதி சென்னையில் கவர்னர் ரோசையா விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். இதில் தமிழ்நாடு கடலோர காவல் படையின் துணை கமோண்டர் மார்க் அருண் தலைமையில் 12 வீரர்கள் பங்கு பெற்று பைக்கில் சென்றனர.; வருகிற 9-ந்தேதி நிறைவு பெரும் இந்த பேரணி நேற்று கோடியக்கரையிலிருந்து புறப்பட்டு வாய்மேடு வழியாக துளைசியாபட்டினம் வந்து முத்துப்பேட்டை எல்லைக்கு வந்தது பின்னர் புறப்பட்டு கரையங்காடு, இடும்பாவனம், தில்லைவிளாகம், ஜம்புவானோடை வழியாக முத்துப்பேட்டை ஆசாத்நகர் கோரையாற்று பாலம் வந்தது. அங்கே முத்துப்பேட்டை கடலோர காவல்படை சப்-இன்ஸ்பெக்டர் நீலக்கண்டன், காவலர் வெற்றிச்செல்வன், குற்ற பிரிவு காவலர் குணசேகரன் உட்பட ஊர் காவல் படை போலீசார் அவர்களை வரவேற்றனர், பின்னர் தலைமை வகித்து வந்த தமிழ்நாடு கடலோர காவல் படையின் துணை கமோண்டர் மார்க் அருண் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்;: 'மீனவர்களின் முழு நலனை கருதி இந்த விழிப்புணர்வு பேரணியை தமிழ்நாடு கடலோர காவல் படை நடத்துகிறது. கடலோர ஊறுகள் வழியாக வருகிறோம் எல்லா பகுதிகளிலும் இந்த விழிப்புணர்வு பேரணிக்கு நல்ல வரவேற்ப்பு இருக்கிறது. மீனவர்கள் அவர்களின் எந்த உதவிக்கும் 1554 என்ற என்னை தொடர்ப்புக்கொண்டு புகார் மற்றும் உதவிகளை கேட்டு; பெற்றுக்கொள்ளலாம் என்றார். பின்னர் அந்த பேரணி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் புறப்பட்டு சென்றது.
படம்செய்தி
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை
0 comment(s) to... “ கடலோர காவல் படையின் விழிப்புணர்வு பைக் பேரணி”