முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில்
விளையாட்டு விழா, இலக்கிய மன்ற விழா ஆண்டுவிழா ஆகிய முப்பெரும் விழா தலைமையாசிரியர் தமிழ்செல்வன் தலைமையில் நடைப்பெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாச்சிக்குளம் தாஹீர் முன்னிலை வகித்தார். கொடியை முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் ஏற்றிவைத்தார். மாணவ, மாணவிகளின் அணிவகுப்பை ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன் ஏற்றுக்கொண்டார். ஒலிம்பிக் ஜோதியை பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் அழகிரிசாமி பெற்றுக்கொண்டார். விளையாட்டு போட்டியை கூட்டுறவு சங்க தலைவர் பக்கிரிசாமி துவக்கிவைத்தார். உடற்கல்வி ஆசிரியர் அருள் ஆண்டறிக்கை வசித்தார். அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்று அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகாதேவி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் முருகையன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுப்பிரமணியன், பி.டி.ஏ பொருளாளர் ராஜேந்திரன். நுகர்வோர் பாதுக்காப்பு அமைப்பின் தலைவர் பொன்.வேம்பையன், முன்னால் ஒன்றியக்குழு ஊறுப்பினர்கள் நாச்சிக்குளம் முகைதீன் பிச்சை, செல்லத்துரை, முன்னால் மாணவர்கள் சங்க தலைவர் கந்தசாமி, செயலாளர் தாஜிதின், ஊராட்சி மன்ற ஊறுப்பினர் சத்தியமூர்த்தி, கல்விக்குழு ஊறுப்பினர் ராஜேந்திரன், ஜமாஅத் தலைவர் சுக்குரு மற்றும் தஸ்தஹீர், ஹபிப்முகமது உட்பட பலரும் கலந்துக்கொண்டனர், முன்னதாக ஆசிரியை மாலதி வரவேற்று பேசினார், ஆசிரியர் மகேஸ்வரன் நன்றி கூறினார்.
படங்கள் செய்திகள்
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை