அதிகளவில் உறுப்பினர்களை தீவிரமான சேர்க்க வேண்டும். த.மா.கா கலந்தாய்வு கூட்டத்தில் ஜி.ஆர்.மூப்பனார் உத்தரவு
Posted February 04, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரசின் கலந்தாய்வு கூட்டம்
மாவட்ட பொருப்பாளர் குடவாசல் தினகரன் தலைமையில் நடைபெற்றது. முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார், மூத்த தலைவர் தெட்சினாமூர்த்தி, மாநில நிர்வாகி பி.வி.கே. பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வட்டார பொருப்பாளரும், ஒன்றிய குழு உறுப்பினருமான காமராஜ் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பளராக த.மா.கா முன்னணி தலைவர் ஜி.ஆர்.மூப்பனார் கலந்து கொண்டு பேசுகையில்: திருத்துறைப்பூண்டி சட்டமன்றத்திற்கு உட்பட்ட திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் பகுதியில் த.மா.காவின் உறுப்பினர் சேர்க்கை மிகவும் சோர்வாக உள்ளது. கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொரும் கடமையுடன் இளைஞர்களையும் மற்றவர்களையும் அதிகளவில் உறுப்பினர்களாக தீவிரமாக சேர்த்து விரைந்து முடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டு பேசினார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் வ.க.வ.கந்தவேல், கங்கை செல்லதுரை, சிங்கு பாண்டியன், மனக்கால் ராமகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள் ஜீவானந்தம், சித்தமல்லி சண்முகம், திருத்துறைப்பூண்டி ஆரோக்கிய சாமி, கருணாநிதி, கோவிந்தசாமி, மதியரசு, வட்டார நி;hவாகிகள் காந்தி நாராயணன், நடராஜ சுந்தரம், சந்திர சேகரன், தினகரன், அண்ணாதுரை, மேலபெருமழை ராஜபாக்கியம், நாச்சிக்குளம் காமராஜ், சூரியகுமார், லட்சுமணன், அரமங்காடு பாலசுந்தரம், சௌந்தர் ராஜன், வேதமூர்த்தி, குன்னலூர் சிவகுமார், சாமிதுரை உட்பட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.
செய்திகள் படங்கள்
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை
0 comment(s) to... “அதிகளவில் உறுப்பினர்களை தீவிரமான சேர்க்க வேண்டும். த.மா.கா கலந்தாய்வு கூட்டத்தில் ஜி.ஆர்.மூப்பனார் உத்தரவு”