
சமையல் குறிப்பு – இனிப்பு அவல் பொங்கல்
சமையல் குறிப்பு – இனிப்பு அவல் பொங்கல்
என்னங்க இன்னிக்கு இனிப்பு அவல் பொங்கல் சமைத்து
ருசிப்போமா? சரி வாங்க
சமைக்கலாம்

தேவையானவை:
தட்டை அவல் – ஒரு கப்
தேங்காய் துருவல் – அரை கப்
நாட்டுச்சர்க்கரை (அல்) வெல்லத் துருவல் – 1/4 கப்
பொடியாக நறுக்கிய பேரீச்சை -கால் கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த திராட்சை – 10
செர்ரி பழம் – 5 (ஒவ்வொன்றையும் 4 துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வும்).
செய்முறை:
அவலை தண்ணீரில் நன்றாக அலசி எடுத்து, நீர் தெளித்து 5 – 10 நிமிடம் ஊற வைக்க வும். இதனுடன் தேங்கா ய் துருவல், நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத் துருவல், பொடியாக நறுக்கிய பேரீச்சை, செர்ரி பழம், காய்ந்த திராட்சை சேர்த்து… பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கினால், இனிப்பு அவல் பொங்கல் ரெடி.
இது ரத்த சோகையில் இருந்து நிவாரணம் அளிக்கும். குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கு ம் எளிதில் ஜீரணமாகும். காலை, இரவு நேர டிபனாக சாப்பிடலாம்.
முகநூலிலிருந்து . . .
0 comment(s) to... “சமையல் அறை – இனிப்பு அவல் பொங்கல்”