அதிரையில் யாருக்கும் பயனின்றி குடிநீர் சாக்கடையில் கலப்பு

Posted February 05, 2015 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் பகுதியில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள்
மிகவும் சிரமப்பட்டு வந்தனர் .ஆண்களும், பெண்களும் குடங்களை எடுத்துக் கொண்டு இரவு பகல் பாராமல் தண்ணீருக்காக அலைந்தனர் இதனையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தினர் தொடர் முயற்சியின் காரணமாக ஓரளவிற்கு குடிநீர் பிரச்சினை தீர்ந்தது. இந்த நிலையில் அதிராம்பட்டினம் சேர்மன் வாடி பஸ்டாப் பகுதிகளில்  குடிநீர் குழாய்லிருந்து யாருக்கும் பயனின்றி குடிநீர் சாக்கடையில் கலக்கிறது.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் ஒரு குடம் தண்ணீருக்காக குழாயடியில் நீண்ட வரிசையில் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையான இந்த காலகட்டத்தில்  குடிநீர்  வீணாக சாக்கடையில் கலக்கிறது. 
சற்றும் இதை கவனிக்காமல் குடிநீர் வடிகால் வாரியத்தினர் மெத்தன போக்காக இருப்பது வேதனையளிக்கிறது. இனியாவது குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுப்பார் களா? 



0 comment(s) to... “அதிரையில் யாருக்கும் பயனின்றி குடிநீர் சாக்கடையில் கலப்பு”