முத்துப்பேட்டை அருகே சாலை சீரமைக்க கோரி தமாகா சாலை மறியல்
Posted February 21, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
ஒன்றிய கவுன்சிலர் தில்லை காமராஜ் தலைமை வகித்தார். மாவட்ட மூத்த தலைவர் தெட்சிணாமூர்த்தி, மாவட்ட தலைவர் குட வாசல் தினகரன், ஒன்றிய கவுன்சிலர் புனிதா பாலசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகி கந்தவேல், வட்டார பொறு ப்பாளர் காந்தி நாராயணன், மாவட்ட பொறுப்பாளர்கள் கங்கை செல்லத்துரை, ஜாம்பை ஜீவானந்தம், குன்னலூர் குணசேகரன், திருத்துறைப்பூண்டி மதியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஆதரவாக தி.மு.க சார்பில் கனகசுந்தரம், சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் முருகையன், நகர செயலாளர் மார்க்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தாசில்தார் மதியழகன், டி.எஸ்.பி அருண், விஏஓ கனிமொழி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அதிகாரிகள் தரப்பில் விரைவில் சாலையை சீரமைத்து தருவதாக எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே சாலை சீரமைக்க கோரி தமாகா சாலை மறியல்”