மர்ம காய்ச்சல் ஆசிரியை, மாணவி அடுத்தடுத்து பலி முத்துப்பேட்டை அருகே மக்கள் பீதி

Posted February 12, 2015 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை அடுத்த கீழநம்மங்குறிச்சியை சேர்ந்தவர்
கவிதா(20). சிரமேல் குடி அரசு துவக்க பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு தலைவலி மற்றும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டது.
தஞ்சாவூர் அரசு மருத் துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
கீழநம்மங்குறிச்சி ஊராட்சி பெத்தவேளாண் கோட்டகத்தை சேர்ந்தவர் சந்திரமோகன். திருவாரூரில் எஸ்எஸ்ஐ ஆக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சங்கவி(19). தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் தலைவலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவர் முத்துப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக் காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனி ன்றி நேற்று சங்கவி இறந்தார்.
மர்ம காய்ச்சலுக்கு அடுத்தடுத்து 2 இளம்பெண்கள் பலியாக மூளை காய்ச்சல் காரணமாக இருக்குமோ என அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். தகவலறிந்த முத்துப்பேட்டை அரசு மருத்துவமனை சுகாதார ஆய்வா ளர்கள் சீனிவாசன், ராஜேஷ் ஆகியோர் கீழநம்மங்குறிச்சி மற்றும் பெத்தவேளாண் கோட்டகம் கிராமங்களில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி தமிழ் முரசு 


0 comment(s) to... “மர்ம காய்ச்சல் ஆசிரியை, மாணவி அடுத்தடுத்து பலி முத்துப்பேட்டை அருகே மக்கள் பீதி”