தி.மு.க கவுன்சிலர் தர்ணா போராட்டம். முத்துப்பேட்டையில் பரபரப்பு.

Posted February 02, 2015 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை போரூராட்சியின் மாதாந்திர கூட்டம் நேற்று மாலை துணைத் தலைவர் அப்துல் வகாப் தலைமையில் நடைபெற்றது.
செயல் அலுவலர் சித்தி விநாயக மூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள் விவாதம் காராச்சாரமாக நடைபெற்றது. முன்னதாக கூட்டம் துவங்குதற்கு முன் தி.மு.க 10-வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணன் தனது வார்டில் பேட்டை பகுதியில் உள்ள அய்யனார் குளம் படித்துறை மற்றும் வாய்க்கால் தடுப்பு சுவர் ஆகியவை பேரூராட்சி அனுமதியுடன் கிராம கமிட்டி சார்பில் பணி செய்யப்பட்டது. பணி செய்யப்பட்டு பல மாதங்களாகியும் பேரூராட்சி நிர்வாகம் நிதி ஒதிக்கீடு செய்து இது வரை பணம் வழங்கப்படவில்லை என கூறி பேரூராட்சி வாசலில் நின்று சத்தம் போட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார். இதனால் பெரும் பரபரப்பாகி பொது மக்கள் கூட்டமாக கூடி வேடிக்கை பார்த்தனர். இதனை கண்ட பேரூராட்சி செயல் அலுவலர் சித்தி விநாயக மூர்த்தி, துணை தலைவர் அப்துல் வகாப் ஆகியோர் தி.மு.க கவுன்சிலர் கிருஷ்ணனிடம் பேச்சு வார்த்தை நடத்தி நடக்கும் கூட்டத்தில் அந்த பணிக்காக தீர்மாணம் வைக்கப்பட்டு நிதி தொகை வழங்கப்படும் என்று உறுதி கூறினர். அதனால் தி.மு.க கவுன்சிலர் கிருஷ்ணன் கூட்டத்திற்கு சென்றார். பின்னர் நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் நாசர், அய்யப்பன், ஜெகபருல்லா, பாவா பகுருதீன், தம்பி மரைக்காயர், மெட்ரோ மாலிக் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

படங்கள் செய்திகள்
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை


0 comment(s) to... “ தி.மு.க கவுன்சிலர் தர்ணா போராட்டம். முத்துப்பேட்டையில் பரபரப்பு.”