முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்தில் தமிழ்நாடு
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கிராம விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஆடலரசன் தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார். இதில் தடகளம், கபடி, கைபந்து, கால்பந்து போன்ற போட்டிகள் நடைப்பெற்றது. போட்டிகளில் கிராம இளைஞர்கள், குடும்ப பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டு பங்கேற்டனர். இறுதியில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சரவணன் மற்றும் ஊராட்சி ஊறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர.;
படம்செய்தி
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை