குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் விடுதலை தமிழ் புலிகள் கட்சி கோரிக்கை!

Posted February 05, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை செம்படவன்காட்டில் விடுதலை தமிழ் புலிகள்
கட்சியின் ஒன்றிய, நகர கலந்தாய்வு கூட்டம் நிர்வாகி காந்தி தலைமையில் நடைப்பெற்றது, ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் ஜெயசுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைச்செயலாளர் இரா.பாரதி கலந்துக்கொண்டு பேசினார். இதில் முத்துப்பேட்டை பங்களா வாசல் முதல் பேட்டை வரை உள்ள சிமிண்ட் சாலை குண்டும் குழியுமாக உள்ளது பேரூராட்சி நிர்வாகம் உடன் சரி செய்யவேண்டும். அதேபோல் செம்படவன் காடு பெருமாள் கோவில் முதல் குட்டியர் பள்ளி வரை உள்ள சாலைகள், பேட்டை முதல் 14-வது வார்டு வரை உள்ள சாலைகளை உடன் சீரமைக்க வேண்டும். முத்துப்பேட்டை நகரில் உள்ள பள்ளி கூடங்கள் அருகில் வேகத்தடைகளை சமந்தப்பட்ட அதிகாரிகள் அமைக்க வேண்டும். செம்படவன்காடு புரசங்க்கண்ணி குளத்தில் சுற்று சுவர் கட்ட வேண்டும் உட்பட பல்வேறு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது முடிவில் நகர தலைவர் மதியழகன் நன்றி கூறினார்.

படம்செய்தி 
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை


0 comment(s) to... “ குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் விடுதலை தமிழ் புலிகள் கட்சி கோரிக்கை!”