வருகிற 28–ந்தேதி ஒரத்தநாட்டில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல்
Posted February 11, 2015 by Adiraivanavil in Labels: தஞ்சைபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மிகப்பெரிய அளவில் தனியார்துறைக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
முகாமை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை நடத்துகிறது. இதில் 100–க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆயிரத்திற்கும் மேற்பட்ட தகுதியானவர்களை தேர்தெடுக்க உள்ளனர்.
முகாமில் தஞ்சை மட்டுமல்லாது பக்கத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்பவர்களுக்கு சிரமம் இல்லாமல் இருப்பதற்கு இணையதளம் வழியாக பதிவு செய்து கொள்ளலாம்.
இதில் ஆட்களை தேர்வு செய்யும் நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும். தஞ்சையில் உள்ள 589 பஞ்சாயத்துகளில் உள்ளவர்களுக்கு உதவிகரமாக இந்த முகாம் இருக்கும்.
இதன் மூலம் வேலை இல்லாதவர்கள் மற்றும் சிறந்த வேலை தேடுபவர்கள் பயன் பெறுவார்கள். இந்த முகாம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் முக்கிய நிறுவனமான டி.வி.எஸ். இன்சூரன்ஸ், ஓட்டல்கள், எம்.ஆர்.எப். அயல் நாட்டு வேலைக்கு அனுப்பும் நிறுவனம் ஆகியவை உள்பட பல்வேறு நிறுவனங்கள் பங்கு பெற்று ஆட்களை தேர்வு செய்கிறார்கள்.
இதற்கான கல்வி தகுதி 5 முதல் பட்டப்படிப்பு வரை ஆகும். பதிவு கட்டணம் முற்றிலும் இலவசம். இந்த முகாமில் கருத்துரைகள், எந்தந்த துறைகளில் வேலை வாய்ப்பு உள்ளது என்பது குறித்த ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது.
இதனை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். news malaimalar
0 comment(s) to... “ வருகிற 28–ந்தேதி ஒரத்தநாட்டில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல்”