முத்துப்பேட்டை அடுத்த கோபாலசமுதிரத்தில் நேற்று முன்தினம்
தில்லைவிளாகம்-கோபாலசமுத்திரம் பழுதுதடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் த.மா.கா நிர்வாகியும், ஒன்றியக்குழு ஊறுப்பினருமான ஆர்.வி.காமராஜ் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைப்பெற்றது. இதற்கு கிராம மக்களும், அனைத்துக்கட்சி பிரமுகர்களும் ஆதரவு தெரிவித்து சாலைமறியலில் கலந்துக்கொண்டனர். இந்த நிலையில் முத்துப்பேட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட த.மா.கா நிர்வாகியும், ஒன்றியக்குழு ஊறுப்பினருமான ஆர்.வி.காமராஜ் உட்பட மறியலில் ஈடுபட்ட சுமார் 40-பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை