அதிரை இமாம் ஷாபி பள்ளியின் 41வது ஆண்டு விழா

Posted February 02, 2015 by Adiraivanavil in Labels:
அதிரை இமாம் ஷாபி பள்ளியின் 41 வது ஆண்டு விழா நேற்று மாலை  பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக அண்ணா பல்கலைகழக டீன் இளங்கோவன்,காதர் மொய்தீன் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜனாப் ஹாஜி ஹாஜா மொய்தீன் பள்ளி நிர்வாகி ஹாஜி ஜனாப் முஹம்மது இப்ராஹீம்,பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஜனாப் முஹம்மது சலீம் மற்றும்  21வது வார்டு  உறுப்பினர் ஆப்பிள் இப்ராஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.பள்ளியின் மூத்த முதலவர் ஜனாப் ஹாஜி பரகத் அவர்கள் நிகழ்ச்சியினை தலைமை தாங்கினார்.
மேலும் கடந்த ஆண்டு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ/மாணவிகள் உட்பட பள்ளி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது.இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள்,பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.  











செய்திகள் அதிரைஎக்ஸ்பிரஸ்


0 comment(s) to... “அதிரை இமாம் ஷாபி பள்ளியின் 41வது ஆண்டு விழா ”