அதிராம்பட்டினம் பகுதியில் கோமாரி நோய் தாக்கி ஆடு,மாடுகள் பலி

Posted December 06, 2014 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம் பகுதியில் கோமாரி நோய் தாக்கி ஆடு,மாடுகள் பலியாகிவருவதால் ஆடு,மாடு வளர்ப்போர் கவலையடைந்துள்ளனர் கடந்த சில தினங்களாக அதிராம்பட்டினம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பொதுமக்களுக்கு நோய்தொற்று ஏற்படக்கூடும் என சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் தடுப்புநடவடிக்கை மேற்கொண்டு அதிராம்பட்டினம் மற்றும் இதைச்சுற்றியுள்ள பகுதியில் மலேரியா மற்றும் டெங்கு நோய் பரவாமல் தொடர்நடவடிக்கை மேற்கொண்டனர் இருந்தும் ஆடுமாடுகளை நோய் தொற்று தாக்காமல் இருக்க கால்நடைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதால் நோய்தாக்கி ஏராளமான ஆடு மாடுகள் இறந்ததால் ஆடுமாடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர் இதுபற்றி மங்கனங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் கூறுகையில் மழை ஆரம்பித்ததிலிருந்து ஆடுமாடுகளை நோய் தாக்கியது நோய்தாக்கியதும் உடனடியாக கால்நடைத்துறையினர் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் கால்நடைகளை கோமாரி நோய் தாக்காமல் தடுத்திருக்கலாம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் அதிராம்பட்டினம் மற்றும் இதைசுற்றியுள்ள பகுதிகளான மங்கனங்காடு,பழஞ்சூர்,நடுவிக்காடு,புதுக்கோட்டைஉள்ளுர்,கரிசக்காடு,கருங்குளம்,மஞ்சவயல் உள்ளிட்ட பகுதிகளில் கோமாரி நோய் தாக்கி ஆடுமாடுகள் பலியாகி வருகிறது இதில் மங்கனங்காடு கிராமத்தில மட்டும் இரு தினங்களாக 4 மாடுகள் மற்றும் இரண்டு ஆடுகள் கோமாரி நோய் தாக்கி இறந்துள்ளது இனிமேலும் கோமாரி நோய் தாக்காமல் கால்நடைத்துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றார் 

செய்தி 'அதிரைவானவில் நிருபர்






0 comment(s) to... “அதிராம்பட்டினம் பகுதியில் கோமாரி நோய் தாக்கி ஆடு,மாடுகள் பலி ”