பட்டுக்கோட்டை கோட்டத்தில் பிளக்ஸ் போர்டு வைக்க வேண்டிய இடங்கள் அறிவிப்பு!!

Posted December 05, 2014 by Adiraivanavil in Labels:

பட்டுக்கோட்டை கோட்டத்தில் பிளக்ஸ் போர்டு வைக்க வேண்டிய டங்கள் குறித்து கலந்தாய்வு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. பட்டுக்கோட்டை கோட்டத்தில் விளம்பர பலகைகள் (பிளக்ஸ் போர்டு) வைப்பதற்கு இடம் தேர்வு செய்வது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு
ஆர்டிஓ அரங்கநாதன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் ஜவஹர்பாபு, ஆணையர் அச்சயா, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சரவணன், தாசில்தார்கள் பட்டுக்கோட்டை பாஸ்கரன், பேராவூரணி மாணிக்கவள்ளி, இன்ஸ்பெக்டர்கள் பட்டுக்கோட்டை ஜெகதீஸ்வரன், பேராவூரணி அன்பழகன் பங்கேற்றனர். ஏற்கனவே கடந்த ஜூலை 1ம் தேதி ஆர்டிஓ தலைமையில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் பட்டுக்கோட்டை நகராட்சி எல்லைக்குள் கீழ்க்கண்ட பகுதிகள் விளம்பர பலகைகள் வைப்பதற்கு தடை செய்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பேருந்து நிலையம் முதல் மணிக்கூண்டு வரை. மணிக்கூண்டு முதல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை. பேருந்து நிலையம் முக்கம், மணிக்கூண்டு முக்கம், அறந்தாங்கி சாலை முக்கம், சாமியார்மடம் முக்கம், கைகாட்டி முக்கம் ஆகிய 7 இடங்களில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது. அதன் தொடர்ச்சியாக நேற்று நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் பட்டுக்கோட்டை நகரம் மற்றும் வட்டத்தில் விளம்பர பலகை வைக்க அனுமதிக்கப்பட்ட இடங்கள் முடிவு செய்யப்பட்டது.
அனைத்து திருமண மண்டபங்கள்& நிகழ்ச்சி நடைபெறும் வீடுகள் அருகில், தஞ்சாவூர் சாலை இண்டேன் காஸ் முதல் பாளையம் பேருந்து நிறுத்தம் வரை.
தஞ்சாவூர் சாலை மார்க்கெட்டிங் கமிட்டி எதிர்புறம், தஞ்சாவூர் சாலை சவுத் இந்தியன் வங்கி அருகில், அறந்தாங்கி சாலை விவேகானந்தநகர் மெயின் சாலையிலிருந்து டிரான்ஸ்பார்மர் வரை, பெருமாள்கோயில் விஏஓ செல்லத்துரை வீடு எதிரில், லட்சத்தோப்பு இரட்டைசாலை கணபதி சாலை எதிர்புறம், அதிராம்பட்டினம் சாலை பிரியா மருத்துவமனை எதிர்புறம், அதிராம்பட்டினம் சாலை குட்டைக்குளம் அருகில், முத்துப்பேட்டை சாலை பொதுப்பணித்துறை குடியிருப்புகள் அருகில், முத்துப்பேட்டை பிசிஎம்எஸ் அருகில், மதுக்கூர் சாலை பஸ்ஸ்டாப் அருகில், கண்டியன்தெரு ராஜா ஜூவல்லரி வீடு அருகில், வடசேரிசாலை (வாவுத்தோப்பு சாலையிலிருந்து) ராஜாமடம் வாய்க்காலிலிருந்து அய்யா திருமண மண்டபம் வரை, தபால் நிலையம் முக்கம் ஸ்டேட் பேங்க் அருகில், பெரியகடைத்தெரு விஏஓ அலுவலகம் எதிர்புறம், காசாங்குளம் அண்ணா அரங்கம் அருகில், வளவன்புரம் மன்னைநகர் சாலை முக்கம், அந்தோணியார் கோயில்தெரு எம்பிடிசி டெப்போ எதிரில், தலையாரிதெரு& தேரடித்தெரு முக்கம் டிரான்ஸ்பார்மர் அருகில், பண்ணவயல் சாலை லாரி நிறுத்தம் அருகில், நாடியம்மன்கோயில் சாலை சீனிவாசன்நகர் ஆர்ச் அருகில், செட்டித்தெரு முக்கம் பிள்ளையார்கோயில் அருகில் ஆகிய 23 இடங்களில் பிளக்ஸ் போர்டு வைக்கலாம்.
அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், பேருந்து நிலையம் ஒட்டி கிழக்கு கடற்கரை சாலை வரை, மதுக்கூர் பேருந்து நிலையம், முக்கூட்டுச்சாலை, துவரங்குறிச்சி முக்கூட்டுச்சாலை, தம்பிக்கோட்டை முக்கூட்டுச்சாலை ஆகிய இடங்களில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது.
பேராவூரணி வட்டத்தில் விளம்பர பலகை வைக்க அனுமதிக்கப்பட்ட இடங்கள்: பேராவூரணி& அறந்தாங்கி செல்லும் சேதுசாலை கனரா வங்கி அருகில், பட்டுக்கோட்டை& பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் தேரடி அருகில், ஆவணம் சாலை அழகப்பா ஜவுளிக்கடை அருகில், பூக்கொல்லை& காலகம் சாலை பிரிவு இடங்களில் பிளக்ஸ் போர்டுகள் வைக்க வேண்டும்.
ரயில்வேகேட் இருபக்கங்களிலும், பேராவூரணி& சேதுபாவாசத்திரம் சாலையில் பெட்ரோல் பங்க் அருகில், பேராவூரணி அரசு மருத்துவமனை அருகில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது. கூட்ட முடிவில் பேசிய ஆர்டிஓ அரங்கநாதன், கலெக்டரின் உத்தரவின்படி இந்த முடிவுகளுக்கு பொதுமக்கள், அனைத்து கட்சியினர், வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.நன்றி தினகரன்



0 comment(s) to... “பட்டுக்கோட்டை கோட்டத்தில் பிளக்ஸ் போர்டு வைக்க வேண்டிய இடங்கள் அறிவிப்பு!!”