தஞ்சாவுர் எம்.பி பரசுராமன் மகன் சாலை விபத்தில் படுகாயம்
Posted December 04, 2014 by Adiraivanavil in Labels: தஞ்சை
அதிமுகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் பரசுராமனின் மகன் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சென்னை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
அதிமுகவைச் சேர்ந்த தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் பரசுராமன். இவருடைய மகன் பவித்ரன் (15). அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று காலை தன்னுடைய வீடு உள்ள மருத்துவக் கல்லூரி சாலையில் இரு சக்கர மோட்டார் வாகனத்தில் சென்ற போது எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் மோதி படுகாயம் அடைந்தார். தலையில் பலத்த காயம்
அடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
எனினும், தலையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நிலையில் சென்னை அப்போல்லோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
0 comment(s) to... “தஞ்சாவுர் எம்.பி பரசுராமன் மகன் சாலை விபத்தில் படுகாயம்”