வருகிற 15-ந்தேதி முதல் ரேசன்கார்டுகளில் ஒட்ட உள்தாள் வழங்கப்படும் கலெக்டர் சுப்பையன்அறிவிப்பு
Posted December 07, 2014 by Adiraivanavil in Labels: தஞ்சை
தஞ்சை மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி முதல் ரேசன்கார்டுகளில் ஒட்ட உள்தாள் வழங்கப்படும் என்று கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் அறிவிப்பு
குடும்ப அட்டைகளின் (ரேசன் கார்டு) செல்லத்தக்க காலத்தை 31-12-2014-க்கு பிறகு 1-1-2015 முதல் 31-12-2015 வரை மேலும் 1 ஆண்டுக்கு நீட்டித்து அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி முதல் 2015-ம் ஆண்டுக்குரிய உள்தாள்கள் ஒட்ட, குடும்ப அட்டைதாரர்கள் அந்தந்த நியாயவிலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். உள்தாள்கள் வழங்குவதில் கீழ்காணும் வழிமுறைகள் பின்பற்றப்படும்.
வருகிற 15-ந்தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக்கடைகளில் அனைத்து வேலை நாட்களிலும் உள்தாள்கள் வழங்கப்படும். கூட்ட அதிகமானால் ஏற்படும் குழப்பத்தையும், காலதாமதத்தையும் தவிர்க்க நியாயவிலைக்கடையில் பதியப்பட்ட குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை மற்றும் வரிசையில் நிற்க இடவசதி போன்றவற்றை கருத்தில் கொண்டு நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 75 முதல் 100 குடும்ப அட்டைகள் வரை சிறு கூறாக பிரித்து வழங்கீட்டு கூறு முறையில் உள்தாள்கள் வழங்கப்படும்.
கையொப்பம்
அவ்வாறு வழங்கும் போது ஒவ்வொரு நாளும் எந்த அ பதிவேடு முதல் எந்த அ பதிவேடு எண் வரையிலான குடும்ப அட்டைகளுக்கு உள்தாள்கள் வழங்கப்படும் என்ற விவரத்தை குடும்ப அட்டைதாரர்கள் நன்கு அறியும் வண்ணம் நியாயவிலைக்கடைகளில் தெளிவாக விளம்பரப்படுத்தப்படும்.
குடும்ப அட்டைதாரரிடம் உள்தாளினை வழங்கிவிட்டு 2015-ம் ஆண்டிற்கான வழங்கல் பதிவேட்டில் 2015-ம் ஆண்டிற்கான உள்தாளை பெற்றுக்கொண்டேன் என்ற ரப்பர் முத்திரையிட்டு குடும்ப அட்டைதாரரின் கையொப்பம் அல்லது இடது கை பெருவிரல் ரேகை பெற வேண்டும்.
பொதுநாள்
குறிப்பிட்ட நாளில் உள்தாளை பெற வராத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுநாளான சனிக்கிழமை அன்று உள்தாள் வழங்கப்படும். எப்பொருளும் வேண்டாதோர் குடும்ப அட்டைகள் நியாயவிலைக்கடைகளில் புதுப்பிக்க தேவை இல்லை.
மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி தஞ்சை மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு நியாயவிலைக்கடைகள் மூலம் உள்தாள்கள் வழங்கப்படும்..
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.நன்றி தினத்தந்தி
0 comment(s) to... “வருகிற 15-ந்தேதி முதல் ரேசன்கார்டுகளில் ஒட்ட உள்தாள் வழங்கப்படும் கலெக்டர் சுப்பையன்அறிவிப்பு”