அதிரை கடற்பகுதியில் கரும்புபாசி வலையில்சிக்குவதால் - மீனவர்கள் அவதி-(படங்கள்இணைப்பு)
Posted December 07, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் அதிகளவில் கரும்பு பாசிகள் வலையில் சிக்குவதால் மீனவர்கள் அவதியடைந்துள்ளனர் கடலுக்கு அடியில் கோரை பாசிகள் கடல்பாசிகள் கரும்புபாசிகள் என பலவகையான பாசிகள் உள்ளன மேலும்பல்வேறு உவர்நீர் தாவர கூட்டங்கள் உள்ளன தென்மேற்க்கு திசையில் இருந்து காற்று வேகமாக வீசுவதால் கடல் அலைகள் அதிகரித்து கடலுக்கு அடியில் வளர்ந்துள்ள தாவவரக்கூட்டங்கள் அறுந்து கடலில் மிதந்து வந்து கரைகளில்
சேர்கின்றன தற்போது 20 நாட்களாக அதிராம்பட்டினம் கடல் பகுதியில் அதிகளவில் கரும்பு பாசி மிதந்து வருகிறது மீன்வரத்து அதிகமாக உள்ள நேரத்தில் மீன்களோடு பாசிகளும் வலையில் சிக்குவதால் மீனவர்கள் மீன்களோடு பாசிகளையும் சுமந்து வரவேண்டியுள்ளது மேலும் துறைமுகம் திரும்பி மீன்களை வலையில் இருந்து எடுத்து பின்னர் பாசிகளை மீனவர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர் இது குறித்து மீனவர்கள் கூறுகையில் கடலில் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசுவதாலும் கடல் நீரோட்டத்தாலும் இதுபோன்ற பாசிகள் கடலில் மிதந்து வருகிறது காற்றின் திசை அடுத்த மாதம் மாறக்கூடும் அப்போது பாசி வரத்து இருக்காது என்று கூறினார்கள் 
0 comment(s) to... “அதிரை கடற்பகுதியில் கரும்புபாசி வலையில்சிக்குவதால் - மீனவர்கள் அவதி-(படங்கள்இணைப்பு)”