அபுதாபியில் காயிதேமில்லத் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்பட வெளியீட்டு விழா நடைபெற்றது!
Posted December 05, 2014 by Adiraivanavil in Labels: முஸ்லிம் லீக்
முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை வெளியீட்டில் ஆளூர் ஷாநவாஸ் இயக்கத்தில் உருவான கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்பட வெளியீட்டு விழா 4 ம் தேதி மாலை 7.30 மணியளவில் அபுதாபியில் உள்ள அரப் உடுப்பி ஹாலில் எழுச்சியோடும், சிறப்போடும் நடைபெற்றது.
அதிரை தவ்சீஃப் ரஹ்மதுல்லாஹ் இறைமறை வசனங்களை ஓதினார்.அமீரக காயிதேமில்லத் பேரவை அமைப்புச் செயலாளர் லால்பேட்டை A.S.அப்துர்ரஹ்மான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
பேரவையின் பொதுச்செயலாளர் முஹம்மது தாஹா வரவேற்புரையாற்ற பேரவையின் பொருளாலர் ஹமீதுர்ரஹ்மான் அறிமுக உரை நிகழ்த்தினார்.
அபுதாபி நோபல் குழும நிர்வாக இயக்குனர் சமுதாய புரவலர் ஷாஹீல் ஹமீத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் ஆடுதுறை A.M.ஷாஜஹான்மாநில துணைச் செயலாளர் மில்லத் S.B.முஹம்மது இஸ்மாயில் மாநில உடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
ST கூரியர் நிர்வாக இயக்குனர் நவாஸ் கனி கருத்துரை வழங்க ஆவணப்பட இயக்குனர்ஆளூர் ஷாநவாஸ் சிறப்புரையாற்றினார்.
காயிதேமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர் M.அப்துர்ரஹ்மான் Ex MP அவர்கள் நிறைவுரையாற்றினார்.
கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படத்தின் சிடியை அப்துர்ரஹ்மான் Ex MP அவர்கள் வெளியிட அதன் முதல் பிரதியை சமுதாய புரவலர்களான ஹாஹீல் ஹமீத் நவாஸ் கனி இரண்டாம் பிரதியை அய்மான் சங்கத்தின் சையது ஜாஃபர் மூன்றாம் பிரதியை அய்யம்பேட்டை வாலன் ஜெய்லான் பாட்ஷா ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.
கண்ணியத்திற்குரியகாயிதேமில்லத் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் திரையிடப்பட்டது.
அய்மான் சங்கப் பொதுச்செயலாளர் காயல் SAC ஹமீத் நன்றியுரை நிகழ்த்த துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
அய்மான் சங்கப் பொதுச்செயலாளர் காயல் SAC ஹமீத் நன்றியுரை நிகழ்த்த துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமீரக காயிதேமில்லத் பேரவையும்அபுதாபி அய்மான் சங்கமும் சிறப்பாக செய்திருந்தது.
வரலாற்றை உருவாக்கிய தலைவரின் வரலாற்றை ஆவணப்படமாக ஒன்றரை மணி நேரம் திரையில் அமைதியாக ஆழமாக பார்த்துவிட்டு புதியதோர் வரலாற்றை படைக்க நெஞ்சில் சபதமேற்றவர்களாக அனைவரும் கலைந்து சென்றனர்.
அபுதாபியில் 04.12.2014 அன்று நடைபெற்ற காயிதே மில்லத் ஆவணப் பட திரையீட்டுக்கு பின்னர் அதன் இயக்குநர் ஆளூர் ஷாநவாஸ் உடன் ஊடக நண்பர்கள் சந்திப்பு..
0 comment(s) to... “அபுதாபியில் காயிதேமில்லத் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்பட வெளியீட்டு விழா நடைபெற்றது!”