ஆடம்பர நகரான துபாயில் தெற்காசிய தொழிலாளர்களின் அவல வாழ்க்கை…!(படங்கள் இணைப்பு)

Posted December 08, 2014 by Adiraivanavil in Labels:


தமது குடும்பத்தின் சுபீட்சமான எதிர்காலத்துக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆடம்பர நகரான துபாய்க்கு செல்லும் தெற்கு ஆசிய தொழிலாளர்கள் அங்கு வாழும் பரிதாபகர வாழ்க்கையை ஈரானிய புகைப்படக் கலைஞர் ஒருவர் புகைப்படமெடுத்து வெளியிட்டுள்ளார்.

பர்ஹாத் பெரஹ்மான் என்ற மேற்படி புகைப்படக் கலைஞர் துபாயில் பணியாற்றும் தெற்காசிய தொழிலாளர்கள் குறைந்த சம்பளம் உடலை வருத்தும் வேலை கடுமையான வெயிலில் பணியாற்றும் நிர்ப்பந்தம் என்பவற்றை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகம் வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளது. மேற்படி தொழிலாளர்கள் துபாய் வந்ததும் அவர்களது பாஸ்போர்ட் தொழில் தருநர்களால் பறிமுதல் செய்யப்படுவதால் அவர்கள் தமது பணிகளை விட்டு விலகி தாய் நாடு திரும்ப முடியாத சூழ்நிலை நிலவுகிறது. மேற்படி பணியாளர்கள் துபாயின் புறநகரப் பகுதிகளில் சோனாபூர் என அழைக்கப்படும் முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர்.



அந்த முகாமில் இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் சீனா உள்ளடங்கலான நாடுகளைச் சேர்ந்த 150 000 பேர் வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தொழிலாளர்கள் ஆடம்பர ஹோட்டல்களையும் கட்டமைப்புக்களையும் நிர்மாணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.


0 comment(s) to... “ஆடம்பர நகரான துபாயில் தெற்காசிய தொழிலாளர்களின் அவல வாழ்க்கை…!(படங்கள் இணைப்பு) ”