உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் ஒரு பார்வை...(படங்கள் இணைப்பு)

Posted November 02, 2014 by Adiraivanavil in Labels:
 உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம். பட்டுக்கோட்டையில் இருந்து நாகை போகும் வழியில் 35வது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

சுமார் 45 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் சரணாலயம். 1995ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த சரணாலயம் தமிழகத்தில் உள்ள 13 சரணாலயங்களில் ஒன்றாகும்.மேட்டூர் அணை நீர்தான் இதற்கு ஆதாரம். அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் காவிரியில் பயணப்பட்டு பின்னர் கோரையாறு வழியாக இங்கு வந்து சேர்கிறது.வருடம் முழுவதும் பசுமை களைகட்டி இருந்தாலும் வெளிநாட்டு பறவைகள் வருவதும், இருப்பதும், இனப்பெருக்கம்
செய்வதும், பின்னர் திரும்ப செல்வதும் செப்டம்பர் மாதம் துவங்கி மார்ச் மாதம் வரை நடைபெறும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிக அளவில் பறவைகளை இங்கு பார்வையிடலாம். வருடத்திற்கு பத்து ஆயிரம் பறவைகள் வரை வந்து செல்வதாக ஒரு கணக்கெடுப்பு செல்கிறது.இலங்கை, பாகிஸ்தான், சைபீரியா, ரஷ்யா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்துதான் பெரும்பாலான பறவைகள் வருகின்றன. பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து இவை இங்குள்ள சீதோஷ்ணத்திற்காக வருவதும் பின் இனப்பெருக்கம் செய்து குடும்பத்தோடு திரும்ப செல்வதும் காலங்காலமாக நடந்துவரும் இயற்கையின் ஆச்சர்யமே.நத்தைகுத்தி நாரை, நீலத்தாழைக் கோழி, இரவு நாரை, பாம்பு தாரா, துடுப்புவாயன், நாமக்கோழி, வெள்ளை ஐபிஎஸ், கூழைக்கடா, முக்குளிப்பான், அருவாள் மூக்கன், வக்கா, உள்ளான் போன்ற பறவைகளை வெறும் கண்ணாலயே பார்க்கலாம். அதிகாலை வேளையில் இவைகள் கூட்டம்,கூட்டமாய் பறந்து செல்வதும் இரைதேடிய பிறகு அந்தி சாயும் வேளையில் திரும்புவதும், தன் குஞ்சுகளுக்கு இரையூட்டுவதும், இணையோடு விளையாடுவதும் மகிழ்ச்சி தரும் காட்சிகளாகும்.நன்றி தினமலர்  படங்கள் உதவி: என்.மணிகண்டன்
















0 comment(s) to... “உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் ஒரு பார்வை...(படங்கள் இணைப்பு)”