தஞ்சை மாவட்டத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம்

Posted November 03, 2014 by Adiraivanavil in Labels:

ராமேசுவரம் மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முதல் தஞ்சை மாவட்டத்தில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இறங்கு தளங்களில் விசைப்படகுகள் நிறுத்தப்பட்டு இருந்தன.தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம், செம்பியன்மாதேவிப்பட்டினம் கடலோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். இதில் விசைப்படகு, கண்ணாடி இழை படகுகள் போன்றவைகள் கள்ளிவயல்தோட்டம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் இருந்து மீன்பிடிக்க செல்கின்றனர். சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள மீன்பிடி இறங்கு தளங்களில் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன.ராமேசுவரம் மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை கோர்ட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களை உடனே மீட்க கோரியும் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய மீனவர் சங்க நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி நேற்று முதல் நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் விசைப்படகு மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் விசைப்படகுகள் இறங்கு தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்பாக ஏராளமான மீனவர்கள் வேலை இழப்பும் அதன் காரணமாக வருவாய் இழப்பும் அடைந்துள்ளதாக மீனவர் சங்க பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.நன்றி தினத்தந்தி 


0 comment(s) to... “தஞ்சை மாவட்டத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம்”