முத்துப்பேட்டை அருகே லாரியை வழிமறித்து டிரைவரை தாக்கி பணம் பறிப்பு
Posted November 02, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை அருகே லாரியை வழிமறித்து டிரைவரை தாக்கி பணத்தை பறித்து சென்ற 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் வடக்கு குத்தகை கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கவாசகம்(32). லாரி டிரைவர். நேற்று இரவு அப்பகுதியில் உள்ள சவுக்கு தோப்பில் இருந்து சவுக்கு மரங்களை லோடு ஏற்றி கொண்டு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திற்கு புறப்பட்டார்.முத்துப்பேட்டை& பட்டுக்கோட்டை பைபாஸ் ரோட்டில் மங்களூர் என்ற இடத்தில் சென்றபோது, பின் தொடர்ந்து பைக்கில் வந்த 3 பேர் லாரியை வழிமறித்தனர். பின்னர் மாணிக்கவாசகத்தை கீழே இறக்கி சரமாரி அடித்து உதைத்தனர்.அவரிடம்
இருந்த ரூ.4 ஆயிரத்தை பறித்து கொண்டு வந்த வழியிலேயே தப்பி சென்றனர். கோயிலூர் என்ற இடத்தில் பைக்கின் பின்னால் வந்த வேறு 2 லாரிகளை அதன் டிரைவர் கள் நிறுத்தினர். அதை பார்த்த மர்ம நபர்கள் தங் களை பிடிக்க வந்திருப்பதாக தவறாக கருதி பைக்கை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினர்.பணத்தை பறிகொடுத்த லாரி டிரைவர் மாணிக்கவாசகம் முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப் இன்ஸ்பெக்டர் வெர்ஜி னியா ஆகியோர் வழக்கு பதிந்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.
மேலும் அவர்கள் விட்டு சென்ற பைக்கையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.நன்றி தமிழ்முரசு
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே லாரியை வழிமறித்து டிரைவரை தாக்கி பணம் பறிப்பு”


