அதிரையில் மருந்து தயாரிக்க உதவும் கல் நண்டுக்கு வரவேற்பு

Posted November 04, 2014 by Adiraivanavil in Labels:
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மறவக்காடு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து பைபர் படகுகளில் 2,000 மீனவர்கள் கடலுக்கு சென்று மீன், இறால், நண்டு பிடித்து வருகின்றனர். அதோடு மீனவர்கள் வலையில் கல் நண்டும் அகப்படும். மேலும் விசைப்படகிலும் கல் நண்டு அதிகமாக அகப்படும். கல் நண்டு மிக சிறியதாக இருப்பதால் உணவுக்காக பயன்படுத்துவதில்லை. கோழி தீவனம் தயார் செய்ய கல் நண்டு பயன்படுத்துகின்றனர். கல் நண்டுக்கு தனி
விலை கிடையாது. ஆனால் இப்போது கல் நண்டு மருந்து தயார் செய்ய பயன்படுகிறது என்று மீனவர்களிடம் கல் நண்டை குறைந்த விலைக்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். அதிராம்பட்டினம் கடல் பகுதியில் அகப்படும் கல் நண்டை வியாபாரிகள் வாங்கி மருந்து தயார் செய்வதற்கு சென்னை, மதுரைக்கு அனுப்புகின்றனர். இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மீனவர் சங்கர் கூறுகையில், சம்பா நண்டு, நெடுங்கால் நண்டு, கண் நண்டு, தில்லை நண்டு, சுரக்காய் நண்டு, தொப்பு நண்டு, சிலு நண்டு, கல் நண்டு என பல வகைகள் உள்ளன. இதில் மிகப்பெரிய நண்டு சம்பா நண்டு. 5 கிலோ எடை வரைக்கும் வளர கூடியது. மிக சிறிய நண்டு கல் நண்டு. ஒரு நண்டு 10 கிராம் எடை கொண்டது. கல் நண்டு மிக சிறிதாக இருப்பதால் இந்த நண்டை யாரும் வாங்குவதில்லை.
ஆனால் இந்த நண்டு மருந்து தயார் செய்ய பயன்படுகிறது என்று வியாபாரிகள் எங்களிடத்தில் கூறி வாங்கி செல்கின்றனர். 1 கிலோ ரூ.20க்கு வாங்கி செல்கின்றனர் என்றார்.நன்றி தினகரன் 





0 comment(s) to... “அதிரையில் மருந்து தயாரிக்க உதவும் கல் நண்டுக்கு வரவேற்பு”