முத்துப்பேட்டை பகுதியில் 900 ஏக்கர் சம்பா பயிர் நாசம்-நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
Posted November 03, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை, நவ. 3& முத்துப்பேட்டை அருகே உள்ள எடையூர் சங்கேந்தி மற்றும் வடசங்கேந்தி பகுதியில் சம்பா நெற்பயிர்கள் தொடர் மழையால் நீரில் முழ்கி நாசம் அடைந்து உள்ளன. பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக் கும் உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என கவுன்சிலர் நாகராஜன் கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.அந்த மனுவில் கூறிருப்பதாவது:திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பிர்காவில் உள்ள சங்கேந்தி மற்றும் வடசங்கேந்தி கிராமங்களில் சுமார் 900 ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் அடைந்து உள்ளன. பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உடனடி நிவாரணம் வழங்குவதோடு, உரம், பூச்சி மருந்தும் வழங்க வேண்டும்.ஆறுகள் முறையாக தூர்வாரப்படாததாலும், ஆகாயத்தாமரை, பாசி, நெய்வேலி காட்டாமணக்கு செடிகள் மண்டி கிடப்பதாலும், இடும்பாவனத்தில் உள்ள தடுப்பு அணை திறக்கப்படாமல் இருப்பதாலும் தண்ணீர் வடியாமல் தேங்கி உள்ளது.வடசங்கேந்தி வடிகாலில் இருந்து எடையூர் வழியாக சுமார் 2 கிமீ தூரத்திற்கு புதிய வடிகால் அமைத்து நேரிடையாக மரைக்கா கோரையாற்றில் நீர் வடிய நடவடிக்கை எடுத்தால் கடுவெளி, மாங்குடி, வெள்ளாங்கால், ஆரியலூர் உள்ளிட்ட கிராமங்கள் வெள்ள பாதிப்பில் இருந்து நிரந்தரமாக தப்பித்து கொள்ளும்.தற்போது நீர் வடிந்த நிலையில் பயிர்கள் அழுகிய நிலையில் உள்ளன. ஆகவே அதிகாரிகள் ஆய்வு செய்து தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.நன்றி தமிழ்முரசு 0 comment(s) to... “முத்துப்பேட்டை பகுதியில் 900 ஏக்கர் சம்பா பயிர் நாசம்-நிவாரணம் வழங்க வலியுறுத்தல்”

