முத்துப்பேட்டை அருகே வகுப்பறையில் மின்சாரம் தாக்கி மாணவன் காயம்

Posted November 01, 2014 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மின்சாரம் தாக்கி 3ம் வகுப்பு மாணவர் காயமடைந்தார் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் சிவராமன் நகரை சேர்ந்த பொன்னுசாமி மகன் தமிழ்செல்வன்(7). அதே பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பள்ளி விடுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு தமிழ் செல்வன் வகுப்பறையில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அறுந்து சுவற்றில் தொங்கிய மின்சார ஒயர் மாணவன் மீது பட்டு மின்சாரம் தாக் கியது. இதில் தமிழ்செல்வன் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து சென்ற எடையூர் இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டு பாஸ்கர் ஆகியோர் தமிழ் செல் வனை, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர். பின் னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை யில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நன்றி தினகரன் 


0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே வகுப்பறையில் மின்சாரம் தாக்கி மாணவன் காயம்”