அதிரையில் அ.தி.மு.க தொண்டர் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் நிதி உதவியை அமைச்சர் வைத்திலிங்கம் வழங்கினார் (படங்கள்இணைப்பு)
Posted November 01, 2014 by Adiraivanavil in Labels: ADMK
அதிராம்பட்டினத்தில் அதிமுக பொதுச் செயலாளரும்,முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா சிறையிலடைக்கப் பட்ட தகவல் அறிந்து அதிமுகவினர் பலர் தற்கொலை மூலமாக உயிரை மாய்த்துக் கொண்டனர். சிலர் அதிர்ச்சியில் மாரடைப்பில் காலமானார்கள்.ஜெயலலிதா கைதால் பல்வேறு பகுதிகளில் உயிரிழந்த 193 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா அறிவிப்பு செய்தார்.தற்கொலை செய்து கொண்ட அதிராம்பட்டினம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அ.தி.மு.க தொண்டர்
M. மணி (வயது45),. இவர் தஞ்சை ஆற்றின் பாலத்தின் தடுப்புசுவர் மீது ஏறி, ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும். ஜெயலலிதா வாழ்க என்று கோஷமிட்டபடி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.இந்நிலையில் இன்று காலை அதிரைக்கு வருகை தந்தஅமைச்சர் வைத்திலிங்கம் தற்கொலை செய்து கொண்ட மணி குடும்பத்தினரை நேரடியாக சந்தித்து ஆழந்த இரங்கலை வருத்ததுடன் தெரிவித்துகொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கும் ரூ. 3 லட்சம் நிதியுதவியை மணி குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுகவின் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்0 comment(s) to... “அதிரையில் அ.தி.மு.க தொண்டர் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் நிதி உதவியை அமைச்சர் வைத்திலிங்கம் வழங்கினார் (படங்கள்இணைப்பு)”