அதிரை அருகேஊருக்குள் புகுந்த புள்ளிமான் வனத்துறையிடம் ஒப்படைப்பு

Posted March 23, 2015 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம் அடுத்த சொர்ணக்காடு கிராமத்தில் புள்ளிமான் ஒன்று வழி தவறி உடலில் லேசான காயங்களுடன் ஊருக்குள் வந்தது. இதை பார்த்த பொதுமக்கள், மானை பிடித்து தாசில்தார் ராஜசேகருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மாவட்ட வனஅலுவல ருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தாசில்தார் ராஜசேகர், ஆர்ஐ பாலசுப்பிரமணியன் ஆகியோர் சொர்ணக்காட்டிற்குச் சென்று அங்கு பொதுமக்களால் பிடித்து வைத்திருந்த மானை, வனக் காப்பாளர்கள் ராமச்சந்திரன், கணபதிசெல்வம் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் கோடியக் கரை காட்டு பகுதியில் மானை விட்டனர்.
3 வயது மதிக்கத்தக்க 15 கிலோ எடையுள்ள இந்த ஆண் புள்ளி மான் ஆரோக்கியத்துடன் இருந்தது. நாய்கள் துரத்தியபோது, முட்கள் கீறியதில் இடதுகொம்பு அருகிலும், காலிலும் சிறிது காயம் இருந்தது.


0 comment(s) to... “அதிரை அருகேஊருக்குள் புகுந்த புள்ளிமான் வனத்துறையிடம் ஒப்படைப்பு”