தனியார் பேருந்தில் திடீர் புகை. பயணிகள் ஓட்டம்.முத்துப்பேட்டையில் பரபரப்பு

Posted March 11, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டையில் நேற்று காலை பட்டுக்கோட்டையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் தனியார் பேருந்து ஒன்று பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தது. பின்னர் பயணிகளை ஏற்றிக் கொண்டு
பேருந்து புறப்பட கிளம்பிய போது திடீரென்று பேருந்தின் முன்பக்கத்திலிருந்து அதிகளவில் புகை வெளியேறியது. அதனையடுத்து டிரைவர் மற்றும் நடத்துநர்கள் புகையை அணைக்க போராடினர். நீண்டி நேரமாகியும் புகை அணையாமல் அதிகளவில் வந்துக்கொண்டே இருந்ததால் பேருந்து தீப்பற்றி எறிந்து விபத்து ஏற்பட்டு விடுமோ? என்று அவர்கள் அதிர்ச்சி அடைந்து பேருந்தைவிட்டு கிழே இறங்கினர். இதனை கண்ட பயணிகளும் பேருந்தை விட்டு அலறி அடித்துக்கொண்டு இறங்கி ஓடினர். இதனால் பழைய பேருந்து நிலையம் முழுவதும் பெரும் பரபரப்பாகி பொதுமக்கள் மற்றும் பயணிகள் கூட்டமாகக்கூடி தூரத்தில் நின்று பெரும் அச்சத்துடன் வேடிக்கைப்பார்த்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. பின்னர் பேருந்துகளின் மற்ற டிரைவர்கள் எல்லாம் சேர்ந்து அந்த பகுதியில் சென்ற தனியார் குடிநீர் லாரிலிருந்து குழாய் மூலம் தண்ணீரை பீச்சி அடித்து புகையை கட்டுக்குள் கொண்டு வந்து சரி செய்தனர். இதனால் பல மணி நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பும,; பதற்றமும் ஏற்பட்டது.

படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை




0 comment(s) to... “ தனியார் பேருந்தில் திடீர் புகை. பயணிகள் ஓட்டம்.முத்துப்பேட்டையில் பரபரப்பு”