பட்டுக்கோட்டை அருகே பஸ்–கார் நேருக்கு நேர் மோதி விபத்து கணவன், மனைவி பலி

Posted March 11, 2015 by Adiraivanavil in Labels:



பட்டுக்கோட்டை அருகே பஸ் – கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழில் அதிபர், மனைவியுடன் உயிரிழந்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மன்னை நகர் செண்பகா ரைஸ்மில் சாலையைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 51) தொழில் அதிபர். இவர், மன்னார்குடி நகராட்சி முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர். அவருடைய மனைவி இந்திரா (43). இவர்களுடைய மகன் அரவிந்த் (23). இவர்கள் 3 பேரும் நேற்று ஒரு காரில் பட்டுக்கோட்டையில் ஒரு உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். காரை மணிவண்ணன் ஓட்டினார். அப்போது ஆலத்தூர் கடைத்தெருவில் கார் வந்து கொண்டிருந்த போது பட்டுக்கோட்டையிலிருந்து மன்னார்குடி நோக்கி சென்ற கொண்டிருந்த அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தொழில் அதிபர் மணிவண்ணன், அவருடைய மனைவி இந்திரா இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் இறந்தனர். பலத்த காயம் அடைந்த அரவிந்த் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜவகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிவண்ணன், இந்திரா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
news thinathanthi


0 comment(s) to... “பட்டுக்கோட்டை அருகே பஸ்–கார் நேருக்கு நேர் மோதி விபத்து கணவன், மனைவி பலி”