புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே பிஆர்.பட்டினம் மீனவர் பிடித்து
வந்த நண்டுகளை தனியார் நண்டு கம்பெனியில் விலைக்கு போடுவது வழக்கம். கடந்த 3 நாள் முன்பு மீனவர்களிடம் எடை போட்டு வாங்கிய நண்டுகளில் ஒன்று மட்டும் வித்தியாசமாக இருந்தது. அதன் மேல் ஓட்டில் இயேசு உருவம் போல் இருந்தது. இந்த நண்டை பார்க்க தினசரி 100க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் அங்கு வந்து குவிகின்றனர். நண்டு ஐஸ் பாக்சில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.