வீட்டில் ஊதுபத்தியை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்!!!

Posted March 17, 2015 by Adiraivanavil in Labels:

பெரும்பாலானோர் இன்றளவிலும் கூட தினமும் காலையும் மாலையும் அவர்களது வீட்டில் ஊதுபத்தி ஏற்றி கடவுளை வணங்கி வருகின்றனர்.
தொழுவதற்கு மட்டுமின்றி வீட்டில் நறுமணம் வீசவும் பயன்படுவதனால் ஜாதி மத வேறுபாடின்றி அனைவரது இல்லங்களிலும் குடி புகுந்திருக்கிறது ஊதுபத்தி. ரோஜா, மல்லிகை, முள்ளை என பல மலர்களின் வாசனைகளில் கிடைக்கும் இந்த ஊதுபத்தியினால் உங்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படுகின்றது என்றால் நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும். இரசாயனம் கலந்த பொருள்களில் இருந்து பின்னர் என்ன ஆரோக்கிய நலன்களா கிடைக்கும். இதன் மூலம் உயிரை பறிக்கும் பாதிப்புகள் ஏற்படாது எனிலும் உங்களை மருத்துவமனையில் சேர்க்கும் அளவிற்கு கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும்.

நுரையீரல் கோளாறு
வீட்டினுள் ஊதுபத்தி உபயோகப்படுத்துவதன் காரணமாக காற்றில் கார்பன் மோனாக்சைடு கலக்கிறது. இதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டினால் உங்களது நுரையீரல் பகுதியில் அழற்சி மற்றும் சுவாச கோளாறுகள் ஏற்படுகிறது. மேலும் சிலருக்கு இதனால் இருமல் மற்றும் தும்மல் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

நுரையீரல் அடைப்பு மற்றும் ஆஸ்துமா
ஊதுபத்தி குச்சிகளில் கந்தக டை ஆக்சைடு (Sulfur Di Oxide), கார்பன் மோனாக்சைடு (Carbon Monoxide), நைட்ரஜன் (Oxides of Nitrogen) மற்றும் ஃபார்மல்டிஹைடை ஆக்சைடுகள் (Formaldehyde) போன்றவையின் கலப்பு இருக்கிறது. இது உங்கள் நுரையீரலில் அடைப்பு ஏற்பட வழிவகுக்கும் மற்றும் இதன் காரணமாய் உங்களுக்கு ஆஸ்துமா பிரச்சனையும் ஏற்படலாம்.



சரும பிரச்சனைகள்
சிலர் அவர்களது வீட்டில் தினம் தவறாது ஊதுபத்தி ஏற்றுவர். வெகுநாட்கள் இவ்வாறு அந்த புகை உங்கள் சருமத்தோடு ஊடுருவும் போது மென்மையான உங்களது சருமத்தில் அரிப்பு போன்ற அழற்சிகள் ஏற்படும்.

நரம்பியல் கோளாறுகள்
வெகுநாட்கள் நீங்கள் ஊதுப்பத்தியை பயன்படுத்துவதன் மூலமாக தலைவலி, மறதி மற்றும் ஒருமுகபடுத்தும் தன்மை இழந்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு காரணமாய் இருப்பது ஊதுப்பத்தியில் இருந்து வெளிப்படும் கார்பன் மோனாக்சைடு (Carbon Monoxide), நைட்ரஜன் (Oxides of Nitrogen) போன்ற வாயுக்கள் என கூறப்படுகிறது

புற்றுநோய்
ஒருவேளை நீங்கள் ஊதுபத்தியை அளவிற்கு மீறி உபயோகப்படுத்துபவராக இருந்தால், இது நுரையீரல் புற்றுநோய்கான ஆபத்தை கூட உண்டாக்கலாம் என அமெரிக்காவில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இரத்த நாளம் மற்றும் இரத்த நாளங்களில் அழற்சிகளை உருவாக்குகிறது ஊதுபதியில் இருந்து வெளிவரும் வாயுக்கள்.

மோசமான இருதய பாதிப்பு
தினந்தோறும் ஊதுபத்தியை பயன்படுத்துவது இதயத்திற்கு எதிர்வினை விளைவுகளை உண்டாக்குகிறது. இது நாள்பட்ட பிரச்சனையாக தான் உருவெடுக்கும் என்பதினால் உங்களுக்கு இதன் காரணமே கூட தெரியாமல் போகலாம்.
நச்சுத்தன்மை
உங்களது உடலில் நச்சுத்தன்மையை அதிகரிக்கிறது ஊதுப்பதியில் இருந்து வெளிவரும் வாயுக்கள்.

   செய்திகள்- ஒன்இந்தியா



0 comment(s) to... “வீட்டில் ஊதுபத்தியை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்!!!”