நாட்டை பாதுகாப்பது மீனவ கிராமங்கள் தான் ஐஜி பேச்சு
Posted March 26, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
கடலோர காவல் படையின் ஐஜி சொக்கலிங்கம் தலைமை வகித்து பேசுகையில், மீனவர்களுக்கு பாதுகாப்பு எங்கள் துறை சார்பில் வழங்கப்படுவதை விட நாட்டின் பெருமளவு பாதுகாப்பை மீனவர்கள் தான் பெற்று தருகின்றனர். தமிழ்நாட்டில் 170 கிலோ மீட்டர் கடற்கரை பகுதி உள்ளது. இதில் 596 கடலோர மீனவ கிராமங்கள் நமது நாட்டை பாதுகாத்து வருகின்றன என்றார். மீனவ சங்க நிர்வாகிகள் மீரா முகைதீன், தெட்சிணாமூர்த்தி, முகம்மது இஸ்மா யில், கம்யூனிஸ்ட் நிர்வாகி யோகநாதன், திமுக ஒன்றிய செயலாளர் மனோகரன், மாவட்ட கவுன்சிலர் முரு கையன், தொண்டியக்காடு ஊராட்சி தலைவர் பூவானம், ஒன்றிய கவுன்சிலர் உலகநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
மாவட்ட வனத்துறை அலுவலர் பார்த்திபன், மீன் வளத்துறை இணை இயக்குனர் சுப்பு ராஜ், முத்துப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் ஆர்.கே.பி.நட ராஜன், திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன், முத்துப்பேட்டை டிஎஸ்பி அருண், ஒன்றிய ஆ�ணை யர் வெங்கடேசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக கடலோர காவல் படை இன்ஸ்பெக் டர் சின்னையன் வரவேற்று பேசினார்.
முடிவில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
0 comment(s) to... “நாட்டை பாதுகாப்பது மீனவ கிராமங்கள் தான் ஐஜி பேச்சு”