வரும் மார்ச்29 முதல் துபாய் – திருச்சி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நேரத்தில் மாற்றம்
Posted March 25, 2015 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்தி
துபாய் - திருச்சி இடையே பகலில் இயக்கப்பட்டு
வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வரும் மார்ச்29 முதல் இரவு நேர விமானமாக மாற்றம் செய்யப்படுகிறது.
வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வரும் மார்ச்29 முதல் இரவு நேர விமானமாக மாற்றம் செய்யப்படுகிறது.
தினசரி சேவையாக துபாய் - திருச்சி இடையே இயக்கப்பட்டு வரும் இந்த IX612 விமானம் தற்பொழுது காலை 07:15 மணிக்கு துபாயிலிருந்து புறப்பட்டு மதியம் 12:55 திருச்சி சென்றடைகிறது. பிறகு திருச்சியிலிருந்து IX-611 விமானம் 14:15க்கு புறப்பட்டு மாலை 17:05 க்கு துபாய் வந்து கொண்டிருக்கிறது.
கோடைகாலத்தையொட்டி பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் துபாய் - திருச்சி விமான நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. வரும் மார்ச் 29ம் தேதி முதல் மாலை 18:25 மணிக்கு துபாயிலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 00:05 மணிக்கு திருச்சி சென்றடையும் பின்னர் நள்ளிரவு 00:55 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு அதிகாலை 03:45 மணிக்கு துபாய் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comment(s) to... “வரும் மார்ச்29 முதல் துபாய் – திருச்சி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நேரத்தில் மாற்றம் ”