மகளிர் தினம்: முழுக்க முழுக்க இந்தியப் பெண்கள் இயக்கிய 4 சிறப்பு விமானங்கள்

Posted March 09, 2015 by Adiraivanavil in

சென்னை டூ அந்தமான் சென்னையை அடுத்த மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை அந்தமானுக்கு ஏர்-இந்தியா விமானம் சென்றது. இந்த விமானத்தை மகளிர் தினத்தை முன்னிட்டு முழுக்க முழுக்க பெண்களே இயக்க ஏர்-இந்தியா நிறுவனம் முடிவு செய்தது.அந்தமானுக்கு பெண்களே இயக்கிய விமானத்தின் விமானி மற்றும் குழுவினருக்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.அந்தமானுக்கு பெண்களே இயக்கிய விமானத்தின் விமானி மற்றும் குழுவினருக்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.மேலும் விமானத்தில் சென்ற விமானி மற்றும் பணிப்பெண்களை பெண் டாக்டர்களே பரிசோதனை செய்தனர். இந்த விமானத்தில் உடமைகள் மற்றும் பாதுகாப்பு பணிகளையும் பெண் அதிகாரிகளே செய்தனர்.189 பயணிகள் இதற்காக விமானி தீபா தலைமையில் உதவி விமானி பங்குரிஅகர்வால், பணிப்பெண்கள் ரீனா, சத்யாநாயர், அமீயா, நாகனி, ஜோதி ஆகியோர் கொண்ட பெண்கள் குழு தயாரானது. இந்த விமானத்தில் 7 குழந்தைகள் உள்பட 189 பேர் பயணம் செய்தனர். சென்னையில் இருந்து அதிகாலை அந்தமானுக்கு புறப்பட்டு சென்ற அந்த விமானம், அங்கிருந்து காலை 10 மணிக்கு மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்தது. இதில் 179 பயணிகள் சென்னை வந்து இறங்கினர். இதேபோல் மும்பை- டெல்லி, டெல்லி-ஜோத்பூர்- மும்பை விமானங்களையும் மற்றும் டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகருக்கும், மும்பையில் இருந்து மஸ்கட்டுக்கும் சென்ற விமானங்களையும் பெண் விமானிகளே இயக்கினர்.
30 ஆண்டுகள் நிறைவு
கடந்த 1985-ம் ஆண்டு கொல்கத்தாவில் இருந்து சில்ச்சார் வழித்தடத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஓட்டிச் சென்று சாதனை படைத்த அதே இரு பெண் விமானிகள் நேற்று டெல்லி-மெல்போர்ன் இடையிலான விமானத்தை ஓட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.



0 comment(s) to... “மகளிர் தினம்: முழுக்க முழுக்க இந்தியப் பெண்கள் இயக்கிய 4 சிறப்பு விமானங்கள் ”