ஆபரேஷன் ஆம்லாவை முன்னிட்டு முத்துப்பேட்டையில் இரண்டாவது நாளாக போலீசார் தீவிர சோதனை!

Posted March 20, 2015 by Adiraivanavil in Labels:
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவினால் அதை தடுத்து முறியடிப்பது குறித்து 36 மணி நேர தீவிரவாத தடுப்பு ஒத்திகை என்னும் ஆபரேஷன் ஆம்லா நேற்று காலை முதல் துவங்கியது. 14 கடலோர மாவட்டங்களில் நடைபெறும் இந்த ஒத்திகையில் கடலோர காவல் படையும் தமிழக காவல் துறையினரும் இணைந்து நடத்தி வருகின்றனர். இதில் திருவாரூர் மாவட்ட முத்துப்பேட்டையில் இந்த ஒத்திகையை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காவல் துறை சார்பில் செய்யப்பட்டது. இதனையடுத்து கடலோர பகுதியான கரையங்காடு முதல் இடும்பாவணம் தொண்டியக்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை, பேட்டை, செம்படவன் காடு, தம்பிக்கோட்டை வரை பொலீசார் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். இதில் முத்துப்பேட்டை டி.எஸ்.பி. அருண் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் போன்றவர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். முத்துப்பேட்டை, இடும்பாவனம். கோபாலசமுத்திரம், பேட்டை தம்பிக்கோட்டை உட்பட சுற்றுப்புறங்களில் பத்துக்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டது. அதே போன்று முத்துப்பேட்டை அலையாத்திக்காடு, லகூன் போன்ற பகுதிகளிலும் தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் டூவிலர், போர்வீலர் போன்ற வாகனங்கள். அதை போன்று சுற்றுலா பயணிகள் மற்றும் மீனவர்களின் படகுகளை சோதனையிட்டனர். மேலும் அலையாத்திக்காடு பகுதிக்கு சுற்றுலாவுக்கு வந்த பயணிகளையும் சோதனையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் நேற்று காலை முதல் இன்று காலைவரை போலீசார் சலித்த சல்லடையாக செயல்பட்டு வருகின்றனர் இது குறித்து முத்துப்பேட்டை டி.எஸ்.பி.அருண் செய்தியாளர்களிடம் கூறுகையில்: இப்பகுதி தமிழகத்தின் முக்கிய பகுதியாக கருதப்படுகிறது. அதே போன்று கடலோர பகுதியான அலையாத்திக்காடு, லகூன் போன்ற பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவாமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போதே நடைபெறும் இந்த ஆப்ரேஷன் ஆம்லா சோதனைக்காக தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறன்றனர், பொதுமக்களிடமும், மீனவர்களிடமும் சந்தேகத்துக்கு இடமாக யாராவது தென்பட்டால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்

படம் செய்தி
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை


0 comment(s) to... “ஆபரேஷன் ஆம்லாவை முன்னிட்டு முத்துப்பேட்டையில் இரண்டாவது நாளாக போலீசார் தீவிர சோதனை! ”