தண்ணீர் சிக்கனத்திற்கு துபாய் சிறந்த உதாரணம்!

Posted March 23, 2015 by Adiraivanavil in Labels:



ராமநாதபுரத்தில் பெய்யும் மழையில் 1% மழைகூட ஓராண்டு முழுக்க இங்கு பொழியாது.
நன்னீர் ஏரிகள் எதுவும் இல்லை,ஆறுகள் இல்லை,நிலத்தடிநீர் இல்லை. ஓரளவிற்கு மேல் ஆழமாக தோண்டினால் கச்சா எண்ணெய் மட்டுமே கிடைக்கும்.

ஆனால் இந்த தேசம் தண்ணீரில் தன்னிறைவடைந்த தேசம்.24 மணி நேரமும் தடையில்லாமல் வீடுகளுக்கு தண்ணீர் வரும்.


முழுக்க முழுக்க கடல்நீரை மட்டுமே நம்பி நா நனைகிறது.
குடிக்கும் நீர் கடலில் இருந்துதான் எடுக்கப்பட்டது என சத்தியம் செய்து சொன்னாலும் சிலர் நம்ப மறுப்பார்கள்.
'காசுக்கு ஏற்ற தோசை' என்பதுபோல இங்கு தண்ணீர் 'காஸ்ட்லி'தான்.

1லி பெட்ரோல் 1.80 திர்ஹாம்ஸ் (ரூ.30) 1லி தண்ணீர் குடுவை கடைகளில் 3 திர்ஹாம்ஸ் (ரூ.51)விலைக்கு விற்பனையாகும்.

Dubai Electricity and Water Authorityயால் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் நீர் இந்த அளவிற்கு அதிக விலை இருக்காது.நீரின் தரமும் நன்றாகவே இருக்கும்.
DEWA வீடுகளுக்கு தண்ணீரை விநியோகித்து மட்டும் கட்டணம் வசூலிப்பதில்லை.வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீருக்கும் அதன் அளவை பொறுத்து கட்டணம் உண்டு.

வீடுகளிலிருந்து வெளியேறும் அந்த கழிவு நீர்தான் மறுசுழற்சி செய்யப்பட்டு சாலையோர மரங்கள்,பூச்செடிகள்,பூங்காக்களுக்கு சொட்டு நீர்,தெளிப்பு நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது.

ஜீலை,ஆகஸ்ட் மாதங்களில் சர்வசாதாரணமாக 115° F வெப்பம் வீசும் காலத்திலும் இங்கு சாலை ஓரங்களில் பல வண்ண பூக்கள் பூத்துக்கொண்டிருக்கும்.
அந்த செடிகளின் வேர்களில் நீர் சொட்டிக்கொண்டிருக்கும்.
தண்ணீரை வீணாக்காமல் அதைக்கொண்டு நகரை அழகுபடுத்தி சுற்றுலா பயணிகளை ரசிக்க செய்கிறார்கள்.

இன்று உலக தண்ணீர் தினம் என்றதும் ,ஒரு காலத்தில் தண்ணீரில்லாத இந்த தேசம் இன்று நீர் மேலாண்மையில் பெற்றிருக்கும் ஆற்றலை எழுத வேண்டும் என தோன்றியது.
Thanks : nambikkai Raj.


0 comment(s) to... “தண்ணீர் சிக்கனத்திற்கு துபாய் சிறந்த உதாரணம்!”