புகழ்பெற்ற சற்குணநாதர் கோவிலில் அறநிலையத்துறை சார்பில் ருத்ரயாகம்,

Posted March 08, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் புகழ்பெற்ற அருள்மிகு சற்குணநாதர் கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் தமிழக அரசு உத்தரவின்படி
சிறப்பு ருத்ரயாகம், சிறப்பு வழிப்பாடு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அண்ணாதானம் ஆகியவை நடைப்பெற்றது. இதனை ஒன்றியக்குழு தலைவர் ஆர்.கே.பி. நடராஜன் தலைமை வகித்து துவக்கிவைத்தார். இதில் 67 பெண்களுக்கு மாங்கல்யம் பொருட்களை மாவட்ட ஊராட்சி தலைவி ஜெயலட்சுமி அம்பிகாபதி வழங்கி துவக்கி வைத்தார். கூட்டுறவு சங்க தலைவர் அம்பிகாபதி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், ஒன்றியக்குழு ஊறுப்பினர் ஜெகன், தென்னை வளர்ச்சிகுழு ஊறுப்பினர் செல்லபாண்டியன், வீட்டு வசதி வாரிய துணைத்தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரிகள், பணியாளர்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

படம்செய்தி 
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை


0 comment(s) to... “புகழ்பெற்ற சற்குணநாதர் கோவிலில் அறநிலையத்துறை சார்பில் ருத்ரயாகம், ”