அதிராம்பட்டினம் கரையுர் தெருவில் இரு விழாக்கள் (படங்கள் இணைப்பு)

Posted March 12, 2015 by Adiraivanavil in Labels:




அதிராம்பட்டினம் கரையூர் தெரு ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஆலயத்தில் திருவிழாக்காலங்களில் உபயோகிக்க மின்சாரக்கலையரங்க இல்லாத நிலை இருந்து வந்தது இதனையடுத்து கரையூர் தெரு நிர்வாகிகள் பஞ்சாயத்தார்கள் என்.எஸ்.இளங்கோ அவர்களின் புதல்வரும் தொழிலதிபருமான சிட்டிபாபு அவர்களிடம் கட்டிதரும்படி வேண்டுகோள் விடுத்ததையடுத்து மின்சாரக்கலையரங்கம் கட்டிமுடிக்கப்பட்டது இந்நிலையில் இன்று திறப்பு விழா நடைபெற்றது இதில் தலைவர் பஞ்சாயத்தார்கள் தொழிலதிபர் முத்துகிருஷ்ணன் சிட்டிபாபு மற்றும் கரையுர் தெரு கிராமவாசிகள்
பொதுமக்கள் கலந்து கொண்டனர்.மின்சார கலையரங்கத்திற்கு சிட்டிபாபு அவர்களால் ரூ.5,00,000/= செலவு செய்யப்பட்டது. 

      அதே போல் பள்ளிகூட மதில் சுவர் அமைக்க தொழிலதிபர் முத்துகிருஷ்ணன் அவர்களிடம் வேண்டப்பட்டது அதனை ஏற்று அவரால் கட்டிமுடிக்கப்பட்ட பள்ளிகூட மதில்சுவரும் இன்று திறப்புவிழா காணப்பட்டது. இதில் தலைவர் பஞ்சாயத்தார்கள் தொழிலதிபர் முத்துகிருஷ்ணன் சிட்டிபாபு மற்றும் கரையுர் தெரு கிராமவாசிகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
     இந்த இரு விழாவால் ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஆலயத்தின் அருகில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.























கரையூர் தெரு பள்ளிகூட மதில்சுவருக்கு. முத்துகிருஷ்ணன் அவர்களால் ரூ.5,50000/= செலவு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.


0 comment(s) to... “அதிராம்பட்டினம் கரையுர் தெருவில் இரு விழாக்கள் (படங்கள் இணைப்பு)”