2016-ல் ஆட்சியை இலக்கு வைத்து முத்துப்பேட்டை தி.மு.கவினர் பணிகள் மும்முரம்!

Posted March 13, 2015 by Adiraivanavil in Labels:
தமிழகத்தில் சென்ற சட்டமன்ற தேர்தலிலிருந்து தி.மு.க படு தோல்வியை சந்தித்து வருகிறது. வரலாற்றில் இதுவரை ஏற்ப்படாத இந்த சரிவை சமாளிக்க தி.மு.க தலைமை மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து அதன் மூலம் கட்சியை வளர்க வேண்டும் என்று மேலிடம் உத்தரவிட்டது. இந்த நிலையில் சென்ற வாரம் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றிய தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பூண்டி.கே.கலைவாணன் கட்சியின் வளர்ச்சிக்கு தி.மு.கவினர் ஒவ்வருவரும் அப்பகுதியின் மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து போராட்டங்கள் நடத்த வேண்டும், விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு தொகை வழங்க வேண்டும், இளைஞர்களை அதிக அளவில் சேர்க்கவேண்டும், தொண்டர் அனைவரும் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் அப்பொழுதுதான் நமது கட்சி நன்கு வளர்ச்சி அடையும் 2016-ல் நாம் ஆட்சியை பிடிக்க முடியும் என்று மனசு விட்டு கொட்டி தீர்த்து பேசினார். இதனை கேட்ட குன்னலூர் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் ஆடலரசன் அடுத்த நாளே அவர் ஊராட்சி கிராமத்தில் பலவிதமான விளையாட்டு போட்டிகளை நடத்தி சிறுவர்கள் முதல் குடும்பப்பெண் உட்பட முதியோர் வரை அனைவரையும் வீதிக்கு கொண்டு வந்து போட்டிகள் நடத்தி அசத்தினார.; இதனைக்கண்ட மாவட்ட செயலாளர் பூண்டி.கே.கலைவாணன் மகிழ்ச்சியடைந்து அவரை பாராட்டினார். அதனால் ஒன்றியம் முழுவதும் கட்சிப்பணிகளையும், மக்கள் பணிகளையும் தி.மு.க வினர் போட்டி போட்டுக்கொண்டு ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் முத்துப்பேட்டையை சேர்ந்த தி.மு.க மாவட்ட பிரதிநிதி அகமது இபுராகிம் 2016 தேர்தலை இலக்கு வைத்து தனது பைக்கில் இப்பவே நமது சின்னம் என்றும் அதன் கீழ உதயசூரியன் சின்னத்தை விரைந்து அதன் கீழ 2016 ம் ஆண்டையும் குறிப்பிட்டு உள்ளார், இதனை அனைவரும் வித்தியாசமாக பார்த்து வருகின்றனர். தி.மு.கவினரின் இந்த செயல்பாடு மற்ற கட்சினரை பீதியடைய வைத்துள்ளது.
படம்செய்தி 
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை


.முத்துப்பேட்டையை சேர்ந்த தி.மு.க மாவட்ட பிரதிநிதி அகமது இபுராகிம் 2016 தேர்தலை இலக்கு வைத்து தனது பைக்கில் வரைந்துள்ள காட்சி 



2. குன்னலூர் கிராமத்தில் நடந்த விளையாட்டு போட்டிகள்



0 comment(s) to... “2016-ல் ஆட்சியை இலக்கு வைத்து முத்துப்பேட்டை தி.மு.கவினர் பணிகள் மும்முரம்!”