திருவாரூர் - காரைக்குடி அகல ரயில்வே பாதை பணிக்கு 130 கோடி நிதி ஒதிக்கீடு. சென்னை துறைமுக இயக்குனர் கருப்பு முருகாணந்தம் தகவல்.
Posted March 08, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
தலைவருமான கருப்பு முருகாணந்தம் நிருபர்களுக்கு அளித்தப் பேட்டியில் கூறுகையில்: திருவாரூர் - காரைக்குடி ரயல்வே பாதை என்பது பழமை வாய்ந்த ஒரு ரயில்வே பாதை. இந்தியா முழுவதும் அகல ரயில்வே பாதையாக மாற்றிய நிலையில் இப்பகுதி மட்டும் புறக்கணிக்கப்பட்டு சென்ற ஆட்சியில் துவங்கப்பட்ட பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் இப்பகுதிக்கு ரயில்வே போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. இதனையடுத்து பா.ஜ.க உட்பட பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள் போராட்டங்கள் நடத்தினர். இந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணனின் தீவிர முயற்சியால் இப்பகுதி மக்களின் வசதிக்காக திருவாரூர் முதல் காரைக்குடி வரை உள்ள அகல ரயில்வே பாதைக்கு முதற்கட்டமாக 130 கோடியை மத்திய அரசின் ரயில்வே அமைச்சகம் நிதி ஒதிக்கீடு செய்துள்ளது. அந்த பணி விரையில் துவங்கும். அதே போல் திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பள்ளி வரையிலான அகல ரயில்வே பணிக்கும் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணியும் விரையில் துவங்கும். இவ்வாறு கருப்பு முருகாணந்தம் கூறினார்.
படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
0 comment(s) to... “திருவாரூர் - காரைக்குடி அகல ரயில்வே பாதை பணிக்கு 130 கோடி நிதி ஒதிக்கீடு. சென்னை துறைமுக இயக்குனர் கருப்பு முருகாணந்தம் தகவல்.”