அதிராம்பட்டினத்தில் மழை: உப்பு உற்பத்தி திடீர் பாதிப்பு

Posted March 16, 2015 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் பகுதியில் 3ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் உள்ளன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் உப்பு உற்பத்தி தொடங்குவதற்கான முதல் கட்ட பணிகளை உற்பத்தியாளர்கள் துவங்குவார்கள்.

இந்த ஆண்டும் உப்பள பாத்திகள், வாய்க்கால், வரப்பு ஆகிய பகுதிகளை சீரமைத்து கடந்த சில தினங்களுக்கு முன் பாத்திகளில் கடல் நீரை பம்ப்ஷெட் மூலம் பாய்ச்சினர். இன்னும் 2 தினங்களில் பொன் உப்பு வாரும் பணியை தொடங்கலாம் என உப்பு உற்பத்தியாளர்கள் கருதி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அதிராம்பட்டினம் பகுதியில் கோடைமழை கொட்டியது.
நேற்று மதியம் 12 மணிக்கும் பெய்த மழை, மாலையிலும் 1 மணி நேரம் கனமழையாக கொட்டி தீர்த்தது. இதனால் உப்பள பாத்திகளில் மழை நீர் புகுந்தது.
எனவே உப்பு வாரும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இனி நன்றாக வெயில் அடித்து பாத்திகளில் தேங்கியுள்ள மழை நீர் வற்றிய பிறகுதான் உப்பு கிடைக்கும் அதற்கு இன்னும் 10 நாள் ஆகும் என உப்பு உற்பத்தியாளார் செல்வராஜ் தெரிவித்தார்.


0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் மழை: உப்பு உற்பத்தி திடீர் பாதிப்பு”