ஸ்டாபிங் மாறி பஸிலிருந்து இறங்கியபோது மினிலாரி மோதி படுகாயம் அடைந்தவர் சாவு!

Posted March 08, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர்
சுப்பிரமணியன் மகன் முத்துக்கிருஷ்ணன்(60), இவர் கடந்த 3-ந்தேதி ஊரிலிருந்து தில்லைவிளாகம் செல்ல தனியார் பஸில் ஏறினார். செல்லும்போது தில்லைவிளாகம் செல்ல கோபாலசமுத்திரம் பஸ் ஸ்டாப்பில் இறங்குவதை தவறவிட்டார். அதனால் அடுத்த உப்பூர் மில்லடி ஸ்டாப்பில் இறங்கி வேறு பஸில் ஏற ரோட்டை முத்துக்கிருஷ்ணன் கடந்தார். அப்பொழுது திருத்துறைப்பூண்டியிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத மினிலாரி ஒன்று முத்துக்கிருஷ்ணன் மீது பயங்கரமாக மோதியது இதில் சுமார் 10 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்ட அவருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டது. உடன் ஆபத்தான நிலையில் அவரை மீட்டு 108-ஆம்புலண்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர.; பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கபட்டார், இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி முத்துக்கிருஷ்ணன் இறந்தார், இதுக்குறித்து முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் நதியா வாக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்

செய்தி 
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை


0 comment(s) to... “ஸ்டாபிங் மாறி பஸிலிருந்து இறங்கியபோது மினிலாரி மோதி படுகாயம் அடைந்தவர் சாவு!”