முத்துப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் விஜயராஜன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்: முத்துப்பேட்டை அடுத்துள்ள பேட்டை ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நாளை 09-ம் தேதி மாவட்ட சுகாதார துறை சார்பில் முத்துப்பேட்டை மக்களின் வசதிக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது. இதில் தோல் மருத்துவர், பல் மருத்துவர், கண் மருத்துவர் உட்பட அனைத்து மருத்துவர்களும் பங்கு பெறுகிறார்கள். இதில் இ.சி.சி. கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன், சக்கரை நோய் கண்டறிதல். மார்பக புற்றுநோய், கர்பப்பை பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. காலை 08 மணி முதல் துவங்கும் இந்த மருத்துவ முகாம் மதியம் வரை நடைபெறுகிறது. இதில் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பங்கு பெறலாம். தகுதி உள்ள பயனாளிகளுக்கு இலவசமாக மருந்;துகள், மாத்திரைகள், மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் அனைத்து வியாதிகளுக்கும் உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும். இவ்வாறு அரசு மருத்துவர் விஜயராஜன் தெரிவித்தார்.
படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை