வாழ்நாளை குறி வைக்கும் குளிர் பானங்கள்!
Posted March 09, 2015 by Adiraivanavil in Labels: வானவில் மருத்துவம்
கூல் ட்ரிங்க்ஸ் அல்லது சாஃப்ட் ட்ரிங்க்ஸ் என கூறப்படும் சோடா கலப்பு அதிகமாக இருக்கும் பானங்களை விரும்பி பருகாதவர் யாருமில்லை. பார்ட்டி, வீட்டு விஷேசங்கள், நண்பர்களுடன் வெளியில் செல்லும் போது, திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் என எங்கிலும் இந்த பானங்களை கையில் எந்தியப்படி குடித்துக்கொண்டே சுற்றுவது நாம் அனைவரும் ஸ்டைலாக கருதும் ஃபேஷனான விஷயங்களில் ஒன்று. ஞாயிற்றுக்கிழமைகளிலோ அல்லது விருந்துகளிலோ அதிகமாக சாப்பிட்டுவிட்டால் உடனே நம் அனைவரின் மனதிலும் "டிங்"கென்று ஒரு மணியடிக்கும், "கூல் ட்ரிங்க்ஸ் குடிச்சா எல்லாம் சரியாயிடும்" உடனே நமது வீட்டில் இருக்கும் சிறுவர்களை கடைக்கு அனுப்பி வாங்கி வந்து குடித்துவிடுவோம்.
1.கூல் ட்ரிங்க்ஸ்களில் இனிப்பு சுவைக்காக செயற்கை முறையில் தயாரிக்கப்படும் பிரக்டோஸ்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால், நீண்ட நாள் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
2.துரித உணவுகள். தின்பண்டங்கள், எண்ணெய் உணவுகள் எல்லாம் சாப்பிட்டால் உடலில் கொழுப்பு கூடும் என நம் அனைவருக்கும் தெரியும். சோடா கலந்த கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பதனால் எக்கச்சக்கமாக, உடல் முழுதும் கொழுப்பு கூடுகிறது. இதை நீங்கள் உங்கள் நண்பர்கள் மத்தியிலேயே கூட கண்டிருக்கலாம். ஒரு சிலர் தினசரி கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள், அவர்களின் உடல் எடை எண்ணெய் உணவுகள் சாப்பிடுபவர்களை விட அதிகமாக இருக்கும். இதற்கு காரணம் சோடாவில் இருக்கும் நச்சுக்கள் தான் என்கின்றனர்.
3.கூல் ட்ரிங்க்ஸில் வண்ணம் சேர்ப்பதற்காக மெத்திலிமிடாஜோல் (Methylimidazole) என்னும் இரசாயனம் கலக்கப்படுகிறது, இது விலங்குகளுக்கு ஏற்படும் புற்றுநோயில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறன இரசாயன கலப்புகளினால் தயாரிக்கப்படும் கூல் ட்ரிங்க்ஸ் தான் நம் அனைவரின் விருப்பமான பானமாக இருக்கிறது என்பது வருத்தத்திற்குரியது
4.கூல் ட்ரிங்க்ஸ்களில் அதன் வாழ்நாளை நீட்டிக்க பாஸ்ஃபேட் மற்றும் பாஸ்ஃபோரிக் அமிலங்கள் சேர்க்கப்படுகின்றன, இவை கூல் ட்ரிங்க்ஸ் அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க உதவுகிறது. ஆனால், இந்த கலவைகள் நமது சருமத் தன்மையை பாதிக்கிறது. தசைகளின் வலுவை குறைக்கிறது. இதனால், சீக்கிரமாகவே சருமம் முதிர்ச்சியான தோற்றமடைந்துவிடும்.
5.நிறைய சோடா கலப்புடைய கூல் ட்ரிங்க்ஸ்களில் காஃப்பினின் கலப்புகள் இருக்கிறது, இதன் காரணமாக புற்றுநோய், மார்பக கட்டிகள், இரத்த அழுத்தம், சீரற்ற இதயத்துடிப்பு போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன.
6.சோடாவில் கலக்கப்படும் சோடியம், செயற்கை முறை சர்க்கரை, காப்ஃபைன் போன்றவைகள் உடலின் நீரளவை கெடுக்கிறது. இதன் காரணமாக நமக்கு பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்.
7.நாம் குடிக்கும் அனைத்து வகை குளிர் பானங்களிலும் பைசெப்ஃனால்-ஏ எனப்படும் ரசாயன பூச்சு தடவி செய்யப்படுகிறது, இது ஆண்களின் ஆண்மையை பாதிக்கும் தன்மையுடையதாகும்

0 comment(s) to... “வாழ்நாளை குறி வைக்கும் குளிர் பானங்கள்!”