முத்துப்பேட்டை அருகே விவசாயி வீட்டில் நகை–பணம் திருட்டு
Posted March 08, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
இவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி குடியேறினார். எனவே பழைய வீட்டில் உள்ள பொருட்களை எடுக்க வில்லை. அதனை அங்கு பூட்டி வைத்திருந்தார்.
இதனை நோட்ட மிட்ட மர்ம ஆசாமி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தான்.
வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ. 70 ஆயிரம் ரொக்கப்பணம், 6 பவுன் நகை, 2 செல்போன், வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் ஆகியவற்றை திருடி சென்று விட்டான்.
இதுகுறித்து தமிழ்மணி பெருகவாழ்ந்தான் போலீசில் புகார் செய்தார். முத்துப்பேட்டை டி.எஸ்.பி. அருண் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்கு பதிவு செய்தார்.
திருட்டு போன தமிழ் மணியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய போது அதில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் மணிகண்டன் பேசினார்.
அவர் தான் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர் தமிழ் மணியின் உறவினர் ஆவார். அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது. திருட்டு வழக்கில் சிறை சென்று கடந்த 2 நாட்களுக்கு முன்தான் வெளியில் வந்து இருந்தார்.
உறவினர் என்பதால் புது வீட்டிற்கு இன்னும் பொருட்களை எடுத்து வரவில்லை என தமிழ்மணி கூறி உள்ளார்.
இதனை நோட்டமிட்ட மணிகண்டன் பொருட்களை திருடி சென்று விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
news malaimalar
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே விவசாயி வீட்டில் நகை–பணம் திருட்டு”