இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் இஸ்லாமிய நிகழ்ச்சி நடைபெற்றது.
Posted February 29, 2016 by Adiraivanavil in Labels: பேராவூரணி
பேராவூரணி பிப்ரவரி-29;
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி பட்டுக்கோட்டை சாலை எஸ்.என்.வி.திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் எம்.ஜெயினுலாபுதீன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சம்பை சாதிக்பாட்சா,
மாவட்ட துணைத்தலைவர் ஜே.சேக்தாவூது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தணிக்கை குழு உறுப்பினர் கோவை ஆர்.ரகுமத்துல்லா சிறப்புரையாற்றினார்.
கிளை செயலாளர் அப்துல் அஜீஸ், பொருளாளர் சாதிக் அலி, துணைத்தலைவர் முகமது கனி, துணைச் செயலாளர் ஜாஹிர் உசேன் உள்பட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இஸ்லாம் குறித்த இஸ்லாமிய பொதுமக்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது
0 comment(s) to... “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் இஸ்லாமிய நிகழ்ச்சி நடைபெற்றது.”