கோட்டை அமீர் விருது பெற்ற ஹாஜி M.B அபூபக்கர் அமைச்சரை சந்தித்து வாழ்த்து
Posted February 01, 2016 by Adiraivanavil in Labels: ADMK
அதிரை அஜ்ஜாவியத்துல் ஷாதுலியா ட்ரஸ்ட் நிர்வாக செயலாளரும், அதிமுக மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு துணைத் தலைவருமாகிய ஹாஜி M.B. அபூபக்கர் அவர்களுக்கு தமிழக அரசின் உயரிய விருதாக கருதப்படுகிற 'கோட்டை அமீர்' விருதை தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கடந்த 26 ந்தேதி நடந்த குடியரசு தின விழாவில் வழங்கி கெளரவித்தார்.இந்நிலையில் மாண்புமிகு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ஆர் காந்தி, பி.என் ராமச்சந்திரன், பி. சுப்பிரமணியன், எம். ஜெயபிரகாஷ் நாராயண், அதிரை பேரூராட்சி துணை தலைவரும், அதிமுக நகர செயலாளருமாகிய என்.பிச்சை, அதிமுக நகர துணை செயலாளர் முஹம்மது தமீம், கவுன்சிலர் சிவக்குமார், ஹனீபா ஆகியோர் உடனிருந்தார்.
0 comment(s) to... “கோட்டை அமீர் விருது பெற்ற ஹாஜி M.B அபூபக்கர் அமைச்சரை சந்தித்து வாழ்த்து”