பேராவூரணியில் புதிய வழிதடத்தில் அரசு பஸ்: கலெக்டர் தொடங்கி வைத்தார்
Posted February 28, 2016 by Adiraivanavil in Labels: பேராவூரணி
புதிய வழித்தடத்தில் அரசு பஸ் தொடக்க விழா பேராவூரணி புதிய பேரூந்து நிலையத்தில் நடைபெற்றது. தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் பரசுராமன் முன்னிலை வகித்தார்.
பேராவூரணியில் இருந்து, ஆதனூர், மணக்காடு, மங்களநாடு, சுப்பிரமணியபுரம், நாகுடி வழியாக ஆவுடையார்கோயில் செல்லும் புதிய அரசுப் பேரூந்து வழித்தடத்தை கலெக்டர் சுப்பையன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில், அரசு போக்கு வரத்துக்கழக கும்பகோணம் கோட்ட மேலாளர் பாலமுருகன், கிளைமேலாளர் ராஜசேகர், பேராவூரணி தாசில்தார் ரகுராமன், மாவட்ட கவுன்சிலர்கள் அருள்நம்பி, பழனியம்மாள் சாமியப்பன், அ.தி.மு.க. நகரச் செயலாளர் பக்கிரிசாமி, பேராவூரணி ஒன்றிய குழு தலைவர் சாந்தி அசோக்குமார் உட்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 comment(s) to... “பேராவூரணியில் புதிய வழிதடத்தில் அரசு பஸ்: கலெக்டர் தொடங்கி வைத்தார்”